இன்றைய மருத்துவ குறிப்பு
வெள்ளைப்படுதல் நோயை குணமாக்க வீட்டு வைத்தியம்.
- வெள்ளைப்படுதல் நோயால் அவதிபடும்பொழுது பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு ஏற்படுவது சகஜம். தொடர்ந்து சுரக்கும் திரவம் அப்பகுதியை ஈரம் மிக்கதாக மாற்றி தொற்று உண்டாக வழி வகுக்கிறது.
- பெரும்பாலான பெண்கள் இந்த வெள்ளைபடுதல் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் சுரக்கும் திரவம் எல்லா சமயங்களிலும் கேடு விளைவிப்பது அல்ல.
- சில சமயங்களில் அது துர்நாற்றம் இல்லாமல் இருக்கும். ஆனால் துர்நாற்றம் இருந்தால் தொற்றின் அடையாளம் அது. பொதுவாக மருத்துவர்கள் அந்த திரவத்தை பரிசோதித்து, எந்த வகையை சார்ந்தது என்பதை அறிந்த பிறகே சிகிச்சை அளிக்கின்றனர்.
- இயற்கையாக எல்லாப் பெண்களுக்கும் இத்திரவம் பிறப்புறுப்பை ஈரப்பதத்துடன் வைத்திருக்க, மற்றும் கேடு விளைவிக்கும் பாக்டீரியாவை விரட்ட சுரக்கிறது என்றாலும், அதிலிருந்து துர்நாற்றம் வீசினாலோ அல்லது நிறம் மாறினாலோ அது லீயுகோர்ஹியா என்னும் வெள்ளைபடுதல் நோயின் அறிகுறியாகும்.
இங்கே சில எளிமையான வீட்டு சிகிச்சை குறிப்புகள், வெள்ளைபடுதல் நோயை விரட்ட கொடுக்கப்பட்டுள்ளது:
- நெல்லிப் பொடி இந்த நெல்லிக்காய் வெள்ளைப்படுதல் நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகும். ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை சிறிது தேனுடன் சேர்த்து தினமும் உண்டு வந்தால், நாளடைவில் நீங்கள் மாறுதலை உணர்வீகள்.
- வெண்டைக்காய் இந்நோயை குணப்படுத்துவதில் வெண்டைக்காய் மிக பயனளிக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயை 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க விடவும். பின் அந்த நீரை ஆற விடவும். அதில் 100 மிலி தேன் சேர்த்து தினசரி இருவேளை அருந்தவும். ஒரு மாதத்தில் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
- நன்கு கனிந்த வாழைப்பழம் நன்கு கனிந்த வாழைப்பழங்கள் வெள்ளைப்படுதல் நோய்க்கு ஒரு நிச்சயமான தீர்வாகும். ஒரு கனிந்த வாழை பழத்தை நெய்யுடன் உண்ணவும். அல்லது அதற்கு மாறாக ஒரு பழத்துடன் ஒரு டம்ளர் பால், அரை தேக்கரண்டி நெய் எடுத்துக் கொள்ளவும். விரைவில் அதற்கான பலனை உணர்வீர்கள்.
- கொத்தமல்லி விதைகள். வெள்ளைப்படுதலுக்கான சிகிச்சையில் கொத்தமல்லி விதை பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு கைப்பிடி கொத்தமல்லி விதைகளை எடுத்து, ஓர் இரவு நீரில் ஊற வைக்கவும். காலை எழுந்தவுடன் தினமும் இந்த நீரை பருகவும். விரைவில் வெள்ளைபடுதல் நோய் குணமாகிவிடும்.
- இளநீர் தினமும் இளநீர் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகிவிடும். உடலை குளிர்ச்சியாக்கி, நச்சு பொருட்களை வெளியேற்றுகிறது. நீங்கள் காரட் ஜூஸ் அல்லது ஆட்டு பால் குடிக்கலாம். அதுவும் இந்நோய்க்கு நல்ல மருந்தாகும்.
- அதிமதுரம் பொடி ஆயுர்வேத மருத்துவம் வெள்ளைப்படுதல் நோய்க்கு அதிமதுரம் ஒரு மிக சிறந்த மருந்து என்று கூறுகிறது. இந்நோய் சற்றே தீவிரமாக இருந்தால், அரை தேக்கரண்டி அதிமதுர பொடியை தேனுடன் குழைத்தது தினசரி இருவேளை உண்ணவும். குணமடைய தொடங்கியதும், இருவேளைக்கு பதில் தினசரி ஒருவேளை உண்ணவும்.
- படிகாரம் மற்றும் தயிர் களிம்பு இந்நோயால் அவதிப்படும்பொழுது பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு ஏற்படுவது சகஜம். தொடர்ந்து சுரக்கும் திரவம் அப்பகுதியை ஈரம் மிக்கதாக மாற்றி தொற்று உண்டாக வழி வகுக்கிறது. அதனால் அரிப்பு ஏற்படுகிறது. ஒரு சிட்டிகை படிகாரத் தூள் எடுத்து அதை ஒரு தேக்கரண்டி தயிருடன் கலந்து பிறப்புறுப்பை சுற்றி ஜாக்கிரதையாக தடவவும். சில நாட்களில் அரிப்பு ஏற்படுவது குறைந்து வெள்ளைபடுதலும் குறையத் தொடங்கும். தயிரில் இருக்கும் நல்ல ப்ரோபையாடிக் பாக்டீரியா இந்த செயலை ஆற்றுகிறது.
- சாத தண்ணீர் அல்லது வடிகஞ்சி ஆயுர்வேத மருத்துவப்படி, சாதம் வடித்த தண்ணீர் இது போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாக செயலாற்றுகிறது. அரை கிண்ணம் சாதத்தில், அரை டம்ளர் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். பின் சில மணி நேரங்கள் கழித்து சாதத்தை வடித்துவிட்டு அந்த நீரை பருகவும். உங்கள் நோய்க்கு தீர்வு கிடைக்கும் வரை இதை தொடரவும்.
Comments
Post a Comment