உக்கரை தீபாவளி இனிப்பு | சமையல் குறிப்புகள்

 உக்கரை தீபாவளி இனிப்பு
Agaramuthali Thamizh  (சமையல் குறிப்புகள்) Facebook


  1. # பரிமாறும் அளவு: 7
  2. # ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
  3. # சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
  4. # மொத்த நேரம்: 40 நிமிடங்கள்


  •  கடலைபருப்பு - 1 கப்
  •  வெல்லம் - 1 கப்
  •  நெய் - 5 தேக்கரண்டி
  •  ஏலப் பொடி - 1/4 தேக்கரண்டி
  •  தேங்காய் - 1 மூடி
  •  முந்திரி பருப்பு - 5
  •  உப்பு - 1/4 தேக்கரண்டி 


பருப்பை 2 மணிநேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும், ஊறிய பின் நன்கு தண்ணீரை களைந்து கல் ஏதாவது இருந்தால் அதை எல்லாம் எடுத்து நன்றாக சுத்தம் செய்து வடிய விட்டு


மிக்சியில் அல்லது க்ரைண்டரில் உப்பையும் போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து நன்றாக அரைத்து எடுக்கவும்.


நல்ல அடிகனமுள்ள பாத்திரத்தில் கொஞ்சம் நெய்யை விட்டு முந்திரி பருப்பு போட்டு வறுத்து எடுக்கவும்.

அதிலேயே துருவி வைத்துள்ள தேங்காயையும் போட்டு நல்ல சிவக்க வறுக்கவும்.


மீதமுள்ள நெய்யை விட்டு அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையை போட்டு கிளறி விட்டு கொண்டே இருக்கவும்.

நன்றாக உதிர தொடங்கியவுடன் அடுப்பை நிதானமாக வைத்து நல்ல கிளறி உதிர்க்க வைக்கவும், வேண்டுமென்றால் நெய்யை சேர்க்கலாம்.


பாகு வைப்பதற்கு ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் விட்டு அதில் வெல்லத்தை

போட்டு அடுப்பில் வைத்து கிளறவும்.

பாகு நன்றாக முற்றி வெள்ளையாக நுரைத்து வரும் போது கிளறி வைத்துள்ள பருப்பு உதிரியை இதில் கொட்டி நன்றாக வறுத்து வைத்துள்ள முந்திரி, தேங்காய் எல்லாவற்றையும் போட்டு ஏலப்பொடியும் போட்டு நன்றாக கலக்கவும். 

ஸ்ரீரங்கம், மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் தீபாவளிக்கு செய்யக்கூடிய ஒரு இனிப்பு. இது அரிசி புட்டு போல நன்றாக இருக்கும்.

இந்த உக்காரை அடுத்த தினம் சாப்பிட்டால் மேலும் நன்றாக இருக்கும், பருப்பு கலவை உதிரவில்லை என்றால் புட் ப்ரோஸசரிலோ அல்லது மிக்சியிலோ போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தால் நன்றாக உதிரியாக இருக்கும்.

Comments