இன்றைய மருத்துவ குறிப்பு
தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
பொதுவாக நமது சமையலுக்கு சேர்க்கப்படும் சின்ன வெங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
சின்ன வெங்காயத்தில் கால்சியம் , மினரல் ,வைட்டமின் , ஐயன் , பொட்டாசியம் ,பாஸ்போரோஸ் இது போன்ற சத்துகள் உள்ளது .பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் அதிக சத்து உள்ளது.
இந்த சின்ன வெங்காயத்தை வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் பல ஆரோக்கிய மாற்றங்கள் தென்படும். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.
எப்படி எடுத்து கொள்ளலாம்?
- ஒரு சுத்தமாக பாத்திரம் அல்லது கண்ணாடி பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதில் நன்கு தோலுரித்து இரண்டாகக் கீறிய (அப்போதுதான் தேனுடன் ஊறும்) சின்ன வெங்காயத்தைப் போட்டு அது முழுகும் அளவுக்கு தேனை ஊற்ற வேண்டும்.
- *இரண்டு நாட்கள் அப்படியே ஓரமாக, கைபடாமல் எடுத்து வைக்க வேண்டும்.*
- இரண்டு நாட்கள் கழித்து சின்ன வெங்காயத்தில் தேன் நன்றாக இறங்கியிருக்கும். நீங்கள் வைத்ததை விட சற்று நீர்த்துப் போயிருக்கும். ஏனெனில் வெங்காயத்தில் உள்ள நீர்ச்சத்தும் தேனுடன் சேர்ந்து ஊறியிருக்கும்.
- இதை தினமும் காலையில் வெறும் சாப்பிட்டு வர நிறைய பலன்கள் கிடைக்கும்.
நன்மைகள்
- தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
- சின்ன வெங்காயம், தேன் இரண்டிலுமே நம்முடைய உடலின் ஜீரண சக்தியை மேம்படுத்தி, மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. இதனால் அஜீரணக் கோளாறு உண்டாவது தடுக்கப்படும்.
- தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை காலையில் வெறும் வயிற்றில் தினமுமு் இரண்டு வீதம் சாப்பிடும் போது, அது உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, ரத்தத்தில் உ்ளள பிற கழிவுகளை வௌியேற்றுவதோடு ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்றுகிறது.
- தினசரி காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும்.
- நெஞ்சு சளியால் அவதிப்படுகிறவர்கள் இரவு தூங்கச் செல்லும் முன்பாக தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால், ஓரிரு நாட்களில் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி வாய் அல்லது மலத்தின் வழியே வெளியேறிவிடும்.
- தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும். குறிப்பாக, அடி வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள ஊளைச்சதையைக் குறைக்கும்.
தேவையான பொருட்கள்!
- வெங்காயம் - 1
- தேன்
வைட்டமின் சத்துக்கள்!
- வெங்காயம் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படும் இந்த சிரப்பை குடிப்பதால் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்..., வைட்டமின் A, B, B2, B3, B5, C, E மற்றும் J.
செய்முறை!
மெல்லிசாக வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். ஒவ்வொரு ஸ்லைஸ் வெங்காயத்திலும் தேனை ஒரு டீஸ்பூன் அளவு தெளிக்கவும். ஒரு ஸ்லைஸ் வெங்காயத்தின் மீது மற்றொன்று என அடுக்கவும்.
24 மணிநேரம் இதை ஊறவிடுங்கள். மறுநாள் நீங்கள் ஊறவைத்த இந்த பாத்திரத்தில் சிரப் போன்ற நீர் தங்கியிருக்கும். இதை குடித்து வரவும்.
குறிப்பு!
இருமல் உள்ளவர்கள், இருமலை தடுக்க / குறைக்க ஒரு டீஸ்பூன் இதைக் குடித்து வரலாம்.
Comments
Post a Comment