தேசவழமை சட்டம் | K. Abirami ( LLB)

தேசவழமை சட்டம் என்பது யாழ்ப்பாணம் மற்றும் வட மாகாணத்து மக்களின் சம்பிரதாயங்கள் மற்றும் வழக்காறுகளின் ஓர் சேர்க்கையாகும். அதன் படி குறிப்பாக இந்தியாவின் மலபார் மற்றும் கொரமொண்டல் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு குறிப்பாக இலங்கையின் மன்னார் மற்றும் அது சார்ந்த பகுதிகளில் வசித்து வந்த இந்திய தமிழர்களின் வழக்காறுகள் ஆகும். 

மேலும் ஒல்லாந்தர் இவற்றை தட்டச்சு செய்யும் முன்னர், சமுதாய வழக்காறுகளாகவே காணப்பட்டன. இன்றைய பயன்பாட்டிலே காணப்படுகின்றன தேசவழமை சட்டம் இந்து சட்டம், மொஹொம்மதியன் சட்டம்,  ஆங்கில சட்டம்,  உரோமன் டச்சு சட்டம் மற்றும் ஏனைய சமுதாயத்தின் வழக்காறுகள் என்பவற்றின் தாக்கங்களிற்கு உட்பட்ட/ மாற்றம் அடைந்த ஒன்றாக விளங்குகிறது.

Applicability of Tesawalamai 


தேசவழமை சட்டம் அதன் இயல்பின் அடிப்படையில் தனிப்பட்ட சட்டமாகவும் (Personal Law)…

 


மொழி ஒவ்வொரு இன மத கலாச்சாரத்தின் அடையாளங்களிற்கு வித்திடுகின்ற ஓர் மூலதனம் ஆகும். அது ஒவ்வொரு மனிதனுடையதும் அடிப்படை உரிமைகளுள் முதன்மையானது. எனினும் இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் மொழி உரிமை மறுக்கப்பட்டு வருகின்றமை ஓர் பொதுவான அம்சமாகவே காணப்படுகின்றது. இதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும் மக்களாகிய நாம் எமது மொழி உரிமைகள் பற்றி முழுமையாக அறியாது இருப்பதும்,  சில சமயம் அறிந்திருந்தும் உரிமை மீறலை ஏற்றுககொண்டு செல்வதும் கூட இன்று வரை, குறிப்பாக எமது நாட்டில் இத்தனை சட்டங்கள், ஏற்பாடுகள் இருந்தும் உரிமை மீறல் இடம்பெறுவதற்கு காரணம் எனலாம். 

அந்த அடிப்படையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு படி எமக்கு வழங்கப்பட்டுள்ள மொழி உரிமைகள் எவை என்பதனை அறிவோம் . 


மொழி தொடர்பான பிரச்சினை இலங்கையில் சுதந்திரம் அடைந்த காலம் முதலே இருந்து வருகின்ற ஒன்று. 1956 தனி சிங்கள சட்டம் அதன் பின் 1958 தமிழ் சிறப்பு மொழி சட்டம், 1972 அரசியலமைப்பின் அடிப்படை மற்றும் மொழி சட்டம் , பிற்பாடு 1978 அரசியலமைப்பு, 13ஆம் சீர்திருத்தம், 16ஆம் சீர்திருத்தம்,  1991 அரசியல் கரும மொழிகள் திணைக்கழ சட்டம் என பலவற்றில் எம் மொழி உரிமைகள் பற்றி குறிப்பிட்டு இருப்பதனை காணலாம். 


1978 ( with Amendments) கீழ் மொழி உரிமைகள் 


"எந்தவொரு பிரசைக்கும், தனது இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் சிந்தனைகள், மற்றும் பிறப்பிடம் என்பவற்றின் அடிப்படையில் சலுகைகளை வழங்கவோ, வேறுபாடு காண்பிக்கவோ முடியாது" என்று அரசியலமைப்பின் உறுப்புரை 12(2) தெரிவிக்கின்றது. மேலும் உறுப்புரை 14(1)(ஊ) இன் படி ,"ஒவ்வொரு பிரஜையும் தன் சொந்த மொழி மற்றும் கலாசாரத்தினை அனுபவிக்கவும் விருத்தி செய்யவும் உரிமை உண்டு" என்கின்றது. 

அதன்படி இலங்கை பிரஜைகளது மொழி உரிமை அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் அது மீறப்படும் சந்தர்ப்பங்களில் உறுப்புரை 126இன் படி ஒவ்வொரு பிரஜையும் உயர்நீதிமன்றத்தின் மூலம் நீதியை பெற முடியும். 


இதனை விட அத்தியாயம் 4 மொழி உரிமைகள் பற்றி தனியாக குறிப்பிடுகின்றது. 

• உறுப்புரை 18இன் படி இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் அரச மொழிகளாகவும் , தேசிய மொழிகளாகவும் ( உறுப்புரை 19) ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதுடன்,  ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

• மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள், மாகாண சபைகளின் உறுப்பினர்கள் தத்தமது தேசிய மொழிகளில் கடமைகளை ஆற்றுவதற்கு உரிமை உண்டு ( உறுப்புரை 20) 

• ஒருவர் தத்தமது தேசிய மொழிகளில் இடைநிலை மற்றும் பல்கலைக்கழகங்களிலும் தமது கல்வியை பெற உரிமை உண்டு. ( provided such institutions provide education apart from the national languages) (உறுப்புரை 21) 

• நிர்வாக மொழியை பொறுத்த வரையில்,  1978 அரசியலமைப்பு சிங்கள மற்றும் தமிழ் மொழிகளினை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களை தவிர ஏனைய மாகாணங்களில் சிங்கள மொழி அலுவலகங்களில் முதன்மையானது என்கின்றது. ஆனாலும் அரசியலமைப்பு, நிர்வாக அதிகாரிகள் தத்தமது தேசிய மொழி தவிர்த்து மற்றைய தேசிய மொழியிலும் உரையாடல் மேற்கொள்ள கூடியவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதன் படி மக்கள் நிர்வாக சேவையினை நாடும் பொழுது தத்தமது சொந்த மொழிகளில் அவ் உத்தியோகஸ்தர்களை அணுக உரிமை உண்டு மற்றும் அவ் நிர்வாக சேவை உயர் அதிகாரி இவ் உரிமையை உறுதிப்படுத்துவது அவசியம் ஆகும். ( மாகாண சபை, பிரதேச சபை, உள்ளுராட்சி சபை) 

• சட்டவாக்க மொழியை பொறுத்த வரையில், சட்டம் ( அறிவுறுத்தல்கள், சட்டம், உபசட்டம், அறிவிப்பு, பிரகடனம், அரச கடிதங்கள்) சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் இயற்றப்பட்டு இருப்பதுடன் ஆங்கில மொழியாக்கமும் செய்யப்படல் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது ( மாகாண சபை, பிரதேச சபை, உள்ளுராட்சி சபை, பாராளுமன்றம்). ( உறுப்புரை 23) 

• நீதிமன்ற மொழியை பொறுத்த வரையில்,  சிங்கள மற்றும் தமிழ் மொழிகள் நீதிமன்ற மொழிகளாக இலங்கை முழுவதிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களை தவிர ஏனைய மாகாணங்களில் சிங்கள மொழி முதன்மை மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருவர்- குற்றம் சாட்டப்பட்டவர், சாட்சி, நீதிபதிகள் மற்றும் குறித்த வழக்கு ஒன்றுடன் தொடர்புபடும் ஒருவர் , அவ் நீதிமன்ற மொழியில் பரீட்சயம் இல்லாது இருப்பின் அவ் வழக்கின் போது  மொழிபெயர்பினை கோர உரிமை உண்டு. மேலும் நீதிமன்றத்தில் தத்தமது தேசிய மொழிகளில் ஆவணங்கள் சமர்பிக்கவும் உரிமை உண்டு. 

இவை 1978 அரசியலமைப்பின் படி ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமைகளாகும். 

இவற்றை விட அத்தியாயம் 6 , அரச கொள்ளைகள் பற்றிய அத்தியாயத்திலும் நாட்டின் மும்மொழி கொள்கை பற்றி குறிப்பிட்டுள்ளது. 


இவ்வாறு உரிமைகள் பற்றி அறிந்து இருப்பதன் மூலம் நம் உரிமைகள் மீறப்படும் பொழுது அதனை அலட்சியம் செய்யாது முறைப்பாடுகளை மேற்கொள்வது எமது உரிமை மட்டும் அன்றி கடமையும் ஆகும்.  

குறிப்பாக இவ்வாறு உரிமைகள் மீறப்படும் பொழுது உயர் நீதிமன்றம் மூலமோ, மனித உரிமை ஆணைக்குழு மூலமோ,  இலங்கை அரச கரும மொழிகள் திணைக்கழத்தின் மூலமோ தீர்வினை பெறமுடியும். 

குறிப்பாக அரச கரும மொழிகள்  திணைக்கழத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அல்லது கடிதம் மூலம் உங்களது மொழி உரிமைகள் மீறப்பட்டதனை முறைப்பாடு செய்ய முடியும். இதனை விட தேசிய மொழிகள் அமைச்சு 1956 என்கின்ற தொலைபேசி எண்ணை இவ்வாறான மொழி உரிமைகள் மீறப்பட்டதனை முறைப்பாடு செய்ய அறிமுகம் செய்துள்ளது. 


#DontBeTheCritizer #BeTheChange 

 K. Abirami ( LLB) 

University of Peradeniya

Comments