திராட்சைப்பழம் ( ஆரோக்கிய வாழ்வும் பழங்களும் ) | மருத்துவம்

 ஆரோக்கிய வாழ்வும் பழங்களும்  

திராட்சைப்பழம் 

திராட்சை கொடிவகையைச் சேர்ந்தது. பழங்களில் மிகவும் உன்னதமானது திராட்சைப்பழம். இது மிகவும் சுவையுள்ளது; சத்துள்ளது; எளிதில் செரிக்கக்கூடியது. சமசீதோஷணப் பிரதேசங்களில் இது பெரும்பாலும் வளருகிறது. இதன் தாயகம் காகேசியா. ஆனால் இப்பொழுது உலகின் பல பாகங்களிலும் இது பயிராகிறது. இதில் பல வகைகள் உள்ளன. சுமார் 2000 வகைகளுக்கு மேலாக உள்ளன. 




பழங்கள் உருண்டையாகவும், பெரிதாகவும், சிறியதாகவும், பச்சை, கருப்பு, சிவப்பு, மஞ்சள் எனப் பல நிறங்களையுடையதாகவும் இருக்கின்றன. இப்பழங்கள் கொத்து கொத்தாகக் காட்சியளிக்கின்றன. சாதாரணமாக இப்பழங்களில் சர்க்கரைச்சத்து அதிகம்; சிலவற்றில் புளிப்புத்தன்மையும் உண்டு. பழம் முதிர முதிர அமிலத்தன்மை குறைந்து இனிப்புச் சத்து அதிகரிக்கிறது. இதிலுள்ள இனிப்புத்தன்மை (Grape Sugar) இரத்தத்துடன் விரைவில் கலந்து உடனடியாகச் சக்தியை அளிக்கிறது. எனவே பலஹீனர்களுக்கும், ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்கட்கும் இது நல்ல உணவும் மருந்துமாகும். பலஹீனர்களுக்கு 10 அவுன்சு திராட்சை ரசம் உடனடியாகப் புத்துயிர் அளிக்கும்.  

ஆயுர்வேத சிகிச்சையிலும் திராட்சை ரசம் மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் உபயோகப் படுத்தப்படுகிறது; குடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவும் மருந்துமாகும். கீல் வாதம், தசைவாதம், முடக்குவாதம், சுவாசநோய், சதைப்பெருக்கம் ஆகிய நோய்களுக்கு இது நல்ல மருந்தாகும். பொதுவாக இப்பழம் நோயுள்ளவர்கட்கும் ஆரோக்கியமுள்ளவர்கட்கும் நல்ல உணவு. தொடரும்... நன்றி - வீ.சேரந்தையாபிள்ளை, பி.ஏ.பி.டி. நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

Comments