Agaramuthali Thamizh (சமையல் #குறிப்புகள்) Facebook
- வழங்கியவர்: அப்சரா.
- பரிமாறும் அளவு: 4 - நபர்களுக்கு
- ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
- மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
- • திருவாச்சி இலை ஒரு கைய்யளவு
- • தேங்காய் துருவல் அரை கப்
- • புளி பெரிய நெல்லிக்காய் அளவு
- • சிறிய வெங்காயம் மூன்று
- • பச்சைமிளகாய் மூன்று (காரத்திற்க்கேற்ப)
- • உப்பு தேவையான அளவு
திருவாச்சி இலையை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அகன்ற வானலியை அடுப்பில் வைத்து,அதில் தேங்காய் துருவலை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
பின்பு வெங்காயம்,பச்சை மிளகாய்,சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
அதன் பின் புளியையும்,திருவாச்சி இலையையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஆறவிடவும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் சிறிதளவே தண்ணீர் சேர்த்து அரைத்து விடவும்.
மிகவும் சுவையான மணமான திருவாச்சி துவையல் தயார்.
சாம்பார்,தயிர் சாதங்களுக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
இதை அம்மியில் அரைத்தால் இன்னும் இதன் சுவை அபாரமாக இருக்கும்.
இந்த திருவாச்சி இலையை சிலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இதை பார்ப்பதற்க்கு காசு காசாக இருக்கும். மணமோ அரைத்த பின் கருவேப்பிலை போன்ற வாசத்தை கொடுக்கும்.
உடம்பிற்க்கு மிகவும் நல்லதாகும்.கால் வலிக்கெல்லாம் நல்லது என்று எங்கள் ஊர்களில் சொல்லுவார்கள்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய நல்ல துவையல் இது.
Comments
Post a Comment